தலைசிறந்த தலைவனுக்கு
  'தமிழர்களே! தமிழர்களே! என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் இருப்பேன்' என்ற உன் குரல் நேற்றுமுதல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இது உன் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் அல்ல, உன் உள்ளத்தின் கர்ஜனை. உன் வாழ்க்கையின் தாரகமந்திரம். உணர எமக்குத்தான் தெளிவு போதவில்லை. தனித்தியங்கும் கட்டுமரமென்று  உன்னை நினைத்திருந்தோம் ஆனால் நீ இரும்பு மனுஷியால் கூட அசைத்து பார்க்க முடியாத கப்பலானாய் ! அரசு அதிகாரி , ஆசிரியர், வணிகர், கடைநிலை ஊழியர், அடிமட்ட தொண்டர் என தமிழர்களை எப்படிபிரித்தாலும் இன்று வாழும் அணைத்து தமிழருக்கும் ஏதோ ஒரு வகையில் நீ கொடுத்த வசதியை, சலுகையை, வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்துகின்றோம் என்பதே உண்மை. எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் பிறந்து வாழும் எம்போன்ற இளையோர் பார்க்க வணங்காமுடியுடனும் தனித்தன்மையுடனும் வாழ்ந்த ஒற்றை தலைவன் நீ என்றல் அது மிகையில்லை.இனி வரும் காலங்களில் இப்படி ஒருவன் வாழ்ந்தான் என்றால் நம்பவேனும் இயலுமா?!!!
            இத்தனை தகுதியுள்ள ஒருவனுக்கு தன்மான தலைவனுக்கு அப்படியென்ன நாங்கள் செய்துவிட்டோம் நன்றியோடு? இறுதி இடத்திற்கு கூட இருகை அல்லவா ஏந்திவிட்டோம்! கைகட்டி நிற்கும் கையாலாகாதவரிடம் கையேந்தியல்லவா நின்றுவிட்டோம்! அன்று நீ முதல்வனாகாமல் போனதற்கு எங்கோ எப்படியோ நாங்களும் ஒரு காரணமா என்று எண்ணி மனம்மருளுகிறது, மன்னிப்பு வேண்டுகிறது, மன்னிப்பீரா தலைவரே!?
     தன்னிகரற்ற நீ இறந்தும் அல்லவா வாழ்ந்துவிட்டாய்! 13 வயதில் வெளிப்பட்ட போராளி குணம் அவ்வளவு எளிதிலா அடங்கிவிடும்? இறுதி மூச்சை சுவாசித்த பின்பும் அல்லவா போராடி வென்றுவிட்டாய். இப்படி ஒரு தன்மான தலைவனை இனி இந்நாடு எப்போது காணுமோ? உன் சகாப்த்தம் முடியவில்லை, அது சரித்திரமாய் நிலைபெறும். இன்று விதைக்கப்படுகிறாய் நீ மெரினாவில்! தமிழாய், அறிவாய், தெளிவாய் எம்மில் முளைத்திட!!!
     
                     
                     
              -Jes
x
Good. Truly expressed
ReplyDelete