தடை

அழகிய ஆடை வாங்கிவந்து
அணிவித்து பார்க்கவே ஆசைகொண்டேன்
அழகே! அன்றோர் திருநாள்
உனக்கு! பெயர்சூட்டும் பெருநாள்
நேரத்தை முன்பே ஒதுக்கிவிட்டேன்
நிதியும் என்றோ சேர்த்துவிட்டேன்
அருமை மகளின் அழகைக்கூட்ட
அலைந்து பார்க்கவும் அஞ்சவில்லை
எண்ணவுமில்லை எதிர் நோக்கவுமில்லை
வந்துவிட்டது அதற்கோர் தடை!

Comments

Popular posts from this blog

Thank You Poems...