மனதை ரணமாக்கிய மணித்துளிகள்...

மறந்தேன் எனவா நினைத்திருந்தாய் - மனதில்
புதைத்தேன் அதையும் மறந்திருந்தாய்
கழிந்தது எனவே நீயிருக்க - விதையாய்
முளைத்தது அதையும் நானுணர்ந்தேன்
மன்னிக்கும் முயற்சியும் முடியவில்லை - எனக்கோ
முயற்சியில் தோல்வியும் புதியதில்லை
ஒன்றேதான் கேட்கிறேன் உறமேற்றிடதே - வேரூன்ற
காரணம் அதுவும் நீயாகிடாதே 

Comments

Popular posts from this blog

Thank You Poems...