இதயத்திருடி
தெருவிளக்கின் உதவியால்
மங்கிய
ஒளி
பூண்டிருந்தது
அந்த
அறை .
தரையெங்கும்
சிதறிக்கிடந்த
பொருட்கள்,
ஆங்காங்கே
தண்ணீர்
துளிகள் .
யாரோ
எதையோ
தேடுவதுபோல்
தெரிந்தது .
யாரது ? திருடனா ?
 இல்லை,
அவள்
ஒரு
திருடி,
அதுவும்
மழலைத்திருடி .
அந்த
மங்கிய
ஒளியில்
என்ன
தேடுகிறாள்?
எண்ணி
முடிப்பதற்குள்
எதையோ
எடுத்துவிட்டாள் .
தேடியதை
கண்டெடுத்த
பூரிப்பில்
கண்களால்
சிரிக்கிறாள்  கைகளால்
கொண்டாடுகிறாள்
பரபரப்பாக
ஓடுகிறாள்
கையில்
பிடித்திருக்கும்
பேனாவுடன்,
சுவரை
நோக்கி - 
சித்திரம்
தீட்ட,
அந்த
திருடி,
என்
இதயத்திருடி .
Comments
Post a Comment