தலைசிறந்த தலைவனுக்கு

  
  'தமிழர்களேதமிழர்களேஎன்னை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் இருப்பேன்என்ற உன் குரல் நேற்றுமுதல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றதுஇது உன் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் அல்லஉன் உள்ளத்தின் கர்ஜனைஉன் வாழ்க்கையின் தாரகமந்திரம்உணர எமக்குத்தான் தெளிவு போதவில்லைதனித்தியங்கும் கட்டுமரமென்று  உன்னை நினைத்திருந்தோம் ஆனால் நீ இரும்பு மனுஷியால் கூட அசைத்து பார்க்க முடியாத கப்பலானாய் ! அரசு அதிகாரி , ஆசிரியர்வணிகர்கடைநிலை ஊழியர்அடிமட்ட தொண்டர் என தமிழர்களை எப்படிபிரித்தாலும் இன்று வாழும் அணைத்து தமிழருக்கும் ஏதோ ஒரு வகையில் நீ கொடுத்த வசதியைசலுகையைவாய்ப்பை நிச்சயம் பயன்படுத்துகின்றோம் என்பதே உண்மைஎண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் பிறந்து வாழும் எம்போன்ற இளையோர் பார்க்க வணங்காமுடியுடனும் தனித்தன்மையுடனும் வாழ்ந்த ஒற்றை தலைவன் நீ என்றல் அது மிகையில்லை.இனி வரும் காலங்களில் இப்படி ஒருவன் வாழ்ந்தான் என்றால் நம்பவேனும் இயலுமா?!!!
            இத்தனை தகுதியுள்ள ஒருவனுக்கு தன்மான தலைவனுக்கு அப்படியென்ன நாங்கள் செய்துவிட்டோம் நன்றியோடுஇறுதி இடத்திற்கு கூட இருகை அல்லவா ஏந்திவிட்டோம்கைகட்டி நிற்கும் கையாலாகாதவரிடம் கையேந்தியல்லவா நின்றுவிட்டோம்அன்று நீ முதல்வனாகாமல் போனதற்கு எங்கோ எப்படியோ நாங்களும் ஒரு காரணமா என்று எண்ணி மனம்மருளுகிறதுமன்னிப்பு வேண்டுகிறதுமன்னிப்பீரா தலைவரே!?
     தன்னிகரற்ற நீ இறந்தும் அல்லவா வாழ்ந்துவிட்டாய்! 13 வயதில் வெளிப்பட்ட போராளி குணம் அவ்வளவு எளிதிலா அடங்கிவிடும்இறுதி மூச்சை சுவாசித்த பின்பும் அல்லவா போராடி வென்றுவிட்டாய்இப்படி ஒரு தன்மான தலைவனை இனி இந்நாடு எப்போது காணுமோஉன் சகாப்த்தம் முடியவில்லைஅது சரித்திரமாய் நிலைபெறும்இன்று விதைக்கப்படுகிறாய் நீ மெரினாவில்தமிழாய்அறிவாய்தெளிவாய் எம்மில் முளைத்திட!!!
                                                                -Jes


x

Comments

Post a Comment

Popular posts from this blog

A Roar and Calm

Couplet

Life moves on...